/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிவேக வாகனங்களால் கிராமங்களில் மக்கள் அச்சம்; துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே

ADDED : மார் 18, 2024 06:40 AM

மாவட்டத்திலிருக்கும் ஓடைகள், குளங்களிலிருந்து மணல் எடுக்க அதிகளவில் டிப்பர் லாரிகள் கிராமப்பகுதிகளுக்குள் இயக்கப்படுகின்றன. இதேபோல 50 கி.மீ., துாரத்திற்கு அப்பால் இருக்கும் மில்களுக்கும் தொழிலாளர்களை தினமும் வேன்கள் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர். மில்களுக்கு பெரும்பாலாலும் குக்கிராமங்களில் இருந்தே தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். மில் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்ல ஒவ்வொரு வேனுக்கும் ஒரு வழித்தடத்தை உருவாக்கி பல கிராமங்களுக்குள் சென்று வருகின்றன.
இத்தகைய கிராமங்களை இணைக்கும் ரோடுகள் பெரும்பாலும் 3.75 மீட்டர் அகலமே கொண்டு குறுகிய ரோடுகளாக உள்ளன. அகலம் குறைவான ரோடு என தெரிந்தும் லாரிகள் அதிக வேகமாக இயக்கப்படுகின்றன. டூவீலர்களில் பயணிப்போர், ரோட்டோரங்களில் வசிப்போர் அச்சமடையும் வகையில் இந்த லாரிகள், வேன்களின் வேகம் அதிகமாக உள்ளது.
இதனால் மக்கள் அடிக்கடி இந்த லாரி,வேன்களை மறித்து போராட்டங்களில் ஈடுபடுவது நடக்கிறது. கிராமங்களுக்குள் அதிகமாக செல்வதை தவிர்க்க வாகன உரிமையாளர்கள்,டிரைவர்களுக்கு அவ்வப்போது தகுந்த ஆலோசனை,அறிவுரை கூட்டங்கள் நடத்துவதன் மூலம் ஓரளவிற்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த முன்வர வேண்டும்.