/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் டூவீலர் பயணத்தில் ஹெல்மெட் அணிவது அவசியம்; போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே

ADDED : பிப் 17, 2025 05:18 AM

மாவட்டத்தில் டூவீலரில் அலுவலகம், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து பயணங்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பயணிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதில்லை. ஆனால் தலைக்காய சிகிச்சை கடினமான நிலை என்பதால் விபத்து காலங்களில் தலைக்காயம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்களது குடும்பம் பாதிக்கப்படுகிறது.
ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுத்து போலீசார், போக்குவரத்து துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
ஆனால் டூவீலரில் செல்லும் நபர்கள் ஹெல்மெட்டை தவிர்த்து பயணிக்கின்றனர். மேலும் டூவீலரில் 4 பேர், 3 பேர் என இளைஞர்கள் பயணிக்கின்றனர்.
இதனால் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றார். மேலும் அதிக வேகத்தில் பயணிக்கும் டூவீலர் ஓட்டிகளால் பிற ஓட்டுநர்களும் பாதிப்பு அடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.