ADDED : ஜன 03, 2026 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் நாசிக் முருங்கைக்காய் கிலோ ரூ. 320 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் சுற்றிய கிராம பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. நேற்று கரும்பு முருங்கை கிலோ ரூ.40 அதிகரித்து ரூ.270க்கு விற்பனை ஆனது.கிலோ ரூ.180 க்கு விற்பனை ஆன செடி முருங்கை ரூ.220, கிலோ ரூ.150 க்கு விற்ற மரம் முருங்கை ரூ.190க்கு விற்பனை ஆனது. நாசிக் பகுதியில் விளைந்த முருங்கைக்காய் இங்கு லாரிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நேற்று கிலோ நாசிக் முருங்கை ரூ.320 க்கு விற்பனை ஆனது.

