தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நத்தம்-திண்டுக்கல் ரோடு பணி துவக்கம்

 நத்தம்-திண்டுக்கல் ரோடு பணி துவக்கம்

 நத்தம்-திண்டுக்கல் ரோடு பணி துவக்கம்


ADDED : மார் 18, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: தினமலர் செய்தி எதிரொலியாக நத்தம் திண்டுக்கல் இடையே தார் ரோடு அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியது.

நத்தம் -திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கியது.

முதற்கட்டமாக திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. காலனி, நொச்சி ஓடைப்பட்டி முதல் நத்தம்- உலுப்பகுடி வரை சேதமடைந்த ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டது.அதன்பின் பணிகள் எதுவும் நடக்காததால் புழுதி கிளம்பி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் மார்ச் 15ல் வெளியானது. இதன் எதிரொலியாக தார் ரோடு பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us