ADDED : நவ 14, 2024 07:10 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி; காந்திகிராம பல்கலையில் தேசிய கல்வி தின விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில்,''பல்வகை திறன் கொண்டவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். கேள்வி கேட்பவராக இருந்தால் மட்டுமே சிறந்த தொழில் முனைவோராக உருவாக முடியும் '' என்றார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஓய்வு பேராசிரியர் கோவிந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்வியியல் துறை தலைவர் ஜாகிராபையகம் வரவேற்றார். சமூக அறிவியல் துறைப்புல தலைவர் வேலுமணி பேசினார்.
பல்கலை மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
