ADDED : ஆக 16, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
பழநி: சுதந்திர தினத்தை முன்னிட்டு 'வீ த லீடர்ஸ்' இயக்கம் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் பழநியில் நடந்தது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வலியுறுத்தி நடந்த ஊர்வலத்திற்கு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி அருகே இருந்து இட்டேரி ரோடு, திண்டுக்கல் ரோடு, பஸ் ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட் ரோடு, பெரிய கடை வீதி வழியாக மூலக்கடை அருகே ஊர்வலம் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மரக்கன்றுகள், தேசியக்கொடி ஏந்தியபடி சென்றனர்.
பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
