UPDATED : நவ 26, 2026 06:00 PM
ADDED : நவ 26, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
நத்தம்: தேசிய பால் தினத்தையொட்டி நத்தம் பாதசிறுகுடியில் கால்நடை மருத்துவ முகாம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கால்நடை மருத்துவர் சுபலட்சுமி தலைமை வகித்தார். குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லுாரி மாணவிகள் பங்கேற்று கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் கால்நடைகளுக்கு ஏற்படும் மடிவீக்கத்தின் அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள், சமச்சீர் தீவனம் வழங்குவது, தரமான தீவனத்தைத் தேர்ந்தெடுப்பது, உரிய அளவில் தீவனம் வழங்குவது, சுகாதாரமான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
