தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தேசிய தடகள போட்டிக்கு தகுதி

தேசிய தடகள போட்டிக்கு தகுதி

தேசிய தடகள போட்டிக்கு தகுதி


UPDATED : நவ 04, 2026 10:47 AM

ADDED : நவ 04, 2026 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 10:47 AM ADDED : நவ 04, 2026 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் நடந்தது. இப்போட்டிகளில் பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கோலுான்றி தாண்டுதலில் இப்பள்ளியின் 12ம் வகுப்பு மாணவன் ஹரிஷ் தங்கப்பதக்கம் பெற்றார்.

17 வயதிற்கு உட்பட்டோர் கோலுான்றி தாண்டுதலில் 12ம் வகுப்பு மாணவன் மைலேஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதன் மூலம் மாணவர்கள் இருவரும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us