/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜி.டி.என்.,கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
/
ஜி.டி.என்.,கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : மார் 18, 2024 06:56 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்.
கலைக்கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தாளாளர் ரெத்தினம்,இயக்குனர் துரை ரெத்தினம் வழிகாட்டுதலின்படி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் புதிய எல்லைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் ரேணுகாதேவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாராக திருவனந்தபுரம் ராஜிவ் காந்தி உயிரி தொழில் நுட்ப மைய கதிரேசன் நடராஜன்,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சுந்தரேசன், மதுரை காமராஜ் பல்கலை நோயெதிர்பவியல் துறை ஜெயலட்சுமி,தொழில் நுட்பவியல் துறை வரலட்சுமி,மரபனு பொறியியல் துறை அசோக்குமார் பேசினர். பேராசிரியர்கள் முத்துமாரி, ஜீவலதா, தரணீதரன்,சவுந்தரவள்ளி, சந்திரபிரபா,நவநீதன் பங்கேற்றனர். விலங்கியல் துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

