தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சோலை காடுகளை உருவாக்கும் இயற்கை ஆர்வலர்

 சோலை காடுகளை உருவாக்கும் இயற்கை ஆர்வலர்

 சோலை காடுகளை உருவாக்கும் இயற்கை ஆர்வலர்


ADDED : பிப் 16, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி சோலை காடுகளை உருவாக்குவதே தனது லட்சியமாக கொடைக்கானலைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் கடைபிடித்து வருகிறார். குளு, குளு கொடைக்கானலில் சோலை மரங்களை நடவு செய்து,

அழகு சேர்ப்பதை கடந்த 25 ஆண்டுகளாக செய்து வருபவர் சர்வதேச லயன்ஸ் 324 தமிழ்நாடு பாண்டிச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் ரவீந்திரன். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர் துவக்கத்தில் தமிழக கவர்னர், கலெக்டர், அரசுதுறை உயர் அதிகாரிகளை விழாக்களில் பங்கேற்க செய்து சோலை மரங்களை நடவு செய்தார். பின் வீடுகள் தோறும் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகளை நடவு செய்தும், தனது வீட்டு விழாக்களில் மரக்கன்றுகளை வழங்கி கொடைக்கானலில் சோலை மரங்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றி உள்ளார். இதுவரை ஏராளமான மரங்கள் இவரது களப்பணிகளால் செழித்து வளர்ந்துள்ளன. இதில் சோலை மரம், பழக்கன்று, மூலிகை மரங்களை அதிகளவில் நடவு செய்துள்ளார். இதுவரை லட்சகணக்கான மரக்கன்றுகளை கொடைக்கானல் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் நடவு செய்துள்ளார். இவரது சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளை கண்காணித்த தமிழக அரசு, கடந்த 2013 - 2014ல் இவரது பணிகளை கவுரவிக்கும் வகையில், 'சுற்றுச்சூழல் ஆர்வலர்' விருது, பரிசுத் தொகை வழங்கி பாராட்டியது.

ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு டி.பி.ரவீந்திரன் கூறிய தாவது: மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீரை தற்போது வாட்டர் கேன்களில் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

எதிர்காலத்தில் இன்னும் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்க்க வில்லை எனில், வருங்கால சந்ததியினர் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் சுமக்கும் நிலை ஏற்படும். அந்த நிலை வராமல் இருக்க என்னாலான சிறு முயற்சியே 2 லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவரும் முயற்சியாகும். ஒவ்வொருவரும் இயற்கை மீது ஆர்வம் கொண்டு மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் பட்சத்தில் பூமி செழிக்கும், நீர் வளம் பெருகும். இவரது செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட ஏராளமானோர் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் ஆர்வலத்தில் இணைந்து களப்பணி ஆற்றி வருகின்றனர்., என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us