/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.சி.சி., துப்பாக்கி சுடும் பயிற்சி
/
என்.சி.சி., துப்பாக்கி சுடும் பயிற்சி
ADDED : அக் 25, 2025 04:47 AM
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் என்.சி.சி., தமிழ்நாடு 14 வது பட்டாலியன் சார்பாக அக். 22 முதல் அக். 31 வரை பயிற்சி முகாம் நடக்கிறது.
தமிழ்நாடு திண்டுக்கல் பட்டாலியன் கமேண்டன்ட் லெப்டினன்ட் கர்ணல் ஜெகதீசன், துணை கமேண்டன்ட் லெப்டினன்ட் கர்ணன் நவ்நீத்கணேஷ் தலைமையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 15 கல்லுாரி, 20 பள்ளி என்.சி.சி., மாணவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணி வகுப்பு, வரைபடம், தடை தாண்டுதல், தீயணைப்பு ஒத்திகை, போக்குவரத்து விழிப்புணர்வு, சமுதாய விழிப்புணர்வு, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
என்.சி.சி., அதிகாரி கேப்டன் பாக்கியராஜ், சுபேதார் மேஜர் ஆறுமுகம், சுபேதார் முருகன், சந்திரசேகர் பயிற்சி அளித்தனர்.

