ADDED : பிப் 23, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 3 மாவட்ட அளவில் என்.சி.சி., இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 'பி' சர்டிபிகேட் எழுத்துத் தேர்வு திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் நடந்தது.
மூன்று மாவட்டங்களில் இருந்து 10 கல்லுாரிகளைச் சேர்ந்த 227 என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் அணிவகுப்புத் திறன், வரை படத்திறன், தொலை தொடர்புத் திறன், போர் பயிற்சி உத்திகள் உள்ளிட்டவை அடிப்படையில் செயல்முறை தேர்வு நடந்தது.
திருச்சி குரூப்பின் தலைமை அதிகாரி கர்னல் விஜயகுமார், தமிழக 8-வது பட்டாலியனைச் சேர்ந்த கமாண்டிங் கர்னல் சேதுமாதவன் ஆய்வு செய்தனர். 14- பட்டாலியன் லெப்டினன்ட் கர்னல்கள் ஜெகதீசன், நவநீத் கணேஷ், 15 ராணுவ வீரர்கள் இருந்தனர். ஏற்பாடுகளை ஜி.டி.என்., கல்லூரி என்.சி.சி., கேப்டன் பாண்டீஸ்வரன் செய்திருந்தார்.
