/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காளியம்மன் கோயில் விழாவில் கழு மரம்
/
காளியம்மன் கோயில் விழாவில் கழு மரம்
ADDED : ஆக 16, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: செங்குறிச்சி காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன், கரையம்மன், மலையம்மன் கோயில் திருவிழா ஜூலை 30 ல் சுவாமி சாட்டுதலுடன் தொடங்கியது.
பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடந்தது.
நேற்று முன்தினம் தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கழு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்கள் போட்டி போட்டு ஏறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.