ADDED : நவ 26, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துாரிலிருந்து சீத்தமரம் நால்ரோடு, கோடாங்கிபட்டி, புளியமரத்துக்கோட்டை வழியாக காசிபாளையம் சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் வேடசந்துாருக்கு அரசு பஸ் ஒன்று சென்று வருகிறது. இந்த பஸ் சேதமடைந்த நிலையில் பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் நலன் கருதி இதே வழித்தடத்தில் புதிய பஸ் துவக்க விழா காசிபாளையத்தில் நடந்தது.
வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், தி.மு.க., நிர்வாகிகள் கவிதாமுருகன், மாரிமுத்து, பூலோகம், செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாத்துரை பங்கேற்றனர்.

