ADDED : மார் 05, 2026 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் பேரூராட்சியில் ரூ.1.19 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். கரூர் எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, பேரூராட்சி தலைவர் மேகலா, தி.மு.க., நகரத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின் வரவேற்றார்.
எம்.எல்.ஏ., பேசுகையில், 'வரும் காலத்தில் கூடுதல் நிதி பெற்று அனைத்து வசதிகளுடன் மிகச்சிறந்த பஸ் ஸ்டாண்ட் ஆக வேடசந்தூர் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்துவோம்' என்றார்.

