sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிநீர் பற்றாக்குறைக்கு புதிய திட்டம் அவசியம்: உள்ளாட்சிகளில் விநியோக தாமதத்தை தவிர்க்கலாமே

/

குடிநீர் பற்றாக்குறைக்கு புதிய திட்டம் அவசியம்: உள்ளாட்சிகளில் விநியோக தாமதத்தை தவிர்க்கலாமே

குடிநீர் பற்றாக்குறைக்கு புதிய திட்டம் அவசியம்: உள்ளாட்சிகளில் விநியோக தாமதத்தை தவிர்க்கலாமே

குடிநீர் பற்றாக்குறைக்கு புதிய திட்டம் அவசியம்: உள்ளாட்சிகளில் விநியோக தாமதத்தை தவிர்க்கலாமே


UPDATED : ஜன 19, 2026 03:52 PM

ADDED : ஜன 19, 2026 06:12 AM

Google News

UPDATED : ஜன 19, 2026 03:52 PM ADDED : ஜன 19, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடை ரோடு: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பருவ மழை குறைந்ததால் எதிர்காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய குடிநீர்த்திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும்.

இம்மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 306 ஊராட்சிகள் உள்ளன. மொத்தம் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒன்றில் 2 லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் குடிநீர் தேவையை உள்ளூர் நீர் ஆதாரங்கள் பூர்த்தி செய்து வந்தன. இதற்கு வைகை ஆற்று சிறப்பு குடிநீர் திட்டங்கள், காமராஜர் நீர்த்தேக்கத் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், மருதாநதி அணையின் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உதவின.

2000க்கு பின் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் தினசரி குடிநீர் உற்பத்திக்கு, உள்ளூர் ஆழ்துளை கிணறுகள், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மின்தடை, குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் தினசரி குடிநீர் விநியோகப் பணிகள் நிறுத்தப்படுவதால், மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது படிப்படியாக அதிகரித்து 3, 7, 10 நாட்கள் என நாட்களின் இடைவெளி அதிகரித்து வருகின்றன.

காவிரி திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கண்காணிக்க தவறிவிட்டனர். அதே நேரம் உள்ளூர் நீர் ஆதாரங்களிலும் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் அனைத்து உள்ளாட்சிகளிலும் சீரான நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் நடக்க வில்லை.இந்நிலையில் நகர்ப் பகுதிகளில் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டு குடியிப்புகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் குடிநீர் இணைப்பு கேட்டு உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால் ஏழை நடுத்தர மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, எதிர்கால நலன் கருதி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தனித்தனியாக சிறப்பு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

சிறப்புத் திட்டம் அவசியம்


புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்குவதன் மூலம் அனைத்து மக்களுக்கும் நாள்தோறும் குடிநீர் வழங்குவதை பூர்த்தி செய்ய முடியும். நீண்ட கால திட்டங்களை நிலக்கோட்டை தொகுதிக்கு உருவாக்கி தந்தால் மட்டுமே கிராமங்களில் வசிப்பவர்கள் குடிநீருக்கு அலையாமல் இருப்பர். புதிய சிறப்புத் திட்டங்களை அடையாளம் கண்டு உடனே போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, எத்திலோடு, திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us