ADDED : அக் 02, 2024 06:59 AM
அ நிறம் | அளவு
தொப்பம்பட்டி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக புது தாராபுரம் சாலையில் தனி பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன
பழநி கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பூர், தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து புது தாராபுரம் சாலை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை துறையினர் வேலம்பட்டி முதல் புளியம்பட்டி வரை பேவர் பிளாக் கொண்ட தனி பாதையை சாலை ஓரத்தில் அமைத்து வருகின்றனர்.
