ADDED : ஆக 10, 2025 02:45 AM
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வேடசந்தூர்: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பேரூராட்சி தலைவர் மேகலா, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டியில் நடந்த முகாமிற்கு தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ்,மோகன், சேக் சிக்கந்தர் பாட்ஷா, ஜான் பீட்டர், ஒன்றிய துணைச் செயலாளர் வீராச்சாமி கலந்து கொண்டனர்.
கல்லுாரியில் கருத்தரங்கம்
வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம். சி.ஏ., துறை சார்பில் இன்றைய தொழில்துறையில் முன்னேறும் தணிக்கைத்துறை, நிறுவன ஆட்சி முறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். பேராசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். புதுக்கோட்டை பட்டய கணக்காளர் அபிராமி அய்யாதுரை பேசினார். துறைத்தலைவர் பி. ஜீவானந்தம் ஏற்பாட்டினை செய்திருந்தார். பேராசிரியர் முத்து லட்சுமி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் திருத்த மோசடியைக் கண்டித்து திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினர். நிர்வாகிகள் ராணி, ஆஸாத், அஜாய்கோஷ் கலந்துகொண்டனர்.
மருத்துவ முகாம்
வேடசந்துார் : கல்வார்பட்டி காசிபாளையத்தில் வீராசாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல்
கே.டி. பன்னோக்கு மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் துவக்கி வைத்தார். த டாக்டர் துரைமுருகன் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. தி.மு.க., நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, பூலோகம், செல்லமுத்து, சிவசாமி, ரெங்கராஜ், செல்வம், சரவணன் பங்கேற்றனர்.