ADDED : மார் 31, 2026 05:58 PM

அ நிறம் | அளவு
நிலக்கோட்டை:நிலக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க., ஊழியர் கூட்டத்தில் எம்.எல்.ஏ., தேன்மொழி தேம்பி தேம்பி அழுதவாறு தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசியது உருக்கமாக இருந்தது.
நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் அ.தி.மு.க. ,ஊழியர் கூட்டம் நடந்தது. தொண்டர்களிடையே பேசிய தொகுதி வேட்பாளரான தேன்மொழி எம்.எல்.ஏ., கடந்த காலங்களைப் போல் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறியபடி தேம்பி தேம்பி அழுதவாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த உருக்கமான காட்சியை கண்ட தொண்டர்கள் அமைதி காத்தனர். இதை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ,நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க., கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றார்.
