/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிலக்கோட்டை நா.த.க., வேட்பாளர் அதிருப்தி
/
நிலக்கோட்டை நா.த.க., வேட்பாளர் அதிருப்தி
ADDED : மார் 02, 2026 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கயிலைராஜன் போட்டியிடுகிறார். இவருக்கான அறிமுக கூட்டத்தில் போதிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்து பேசிய அவரை சக நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து பேசிய கயிலைராஜன், நிலக்கோட்டை தொகுதி 50 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாமல் பின்தங்கி உள்ளது. தனித்தொகுதியாக மட்டுமல்லாமல் ஒதுக்கப்பட்ட தொகுதியாகவும் உள்ளது என்றார்.

