ADDED : அக் 22, 2026 12:14 AM
திண்டுக்கல்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்புவோர் உரிய அரசு விதிகளின்படி விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று, உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்காலிக, நிரந்தரப் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்காக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையிடம் தடையில்லா சான்று பெற மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
அதன்படி தற்காலிகப் பட்டாசுக் கடைகள் அமைக்க மொத்தம் 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 72 விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 3 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 45 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
நிரந்தரப் பட்டாசுக் கடைகளுக்காக மொத்தம் 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 54 அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன்படி இதுவரை மொத்தம் 126 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
