/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விடுமுறை வழங்காத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
/
விடுமுறை வழங்காத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ADDED : அக் 03, 2025 12:05 AM
திண்டுக்கல்; காந்திஜெயந்திக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதா என தொழிலாளர் துறை சார்பில் கண்காணிக்கப்பட்டது.
மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். 25 கடைகள், 21 ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டதில் 16 கடைகள், 14 ஓட்டல்கள் என மொத்தம் 30 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காதது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.