ADDED : ஜன 12, 2026 06:33 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போலீஸ் எஸ்.ஐ., ஜான்சன் ஜெயக்குமாரின் கையில் கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தி, தப்பி செல்ல முயற்சித்த பிரபல ரவுடி மேட்டுப்பட்டி விக்னேஷ்வரன், 31, என்பவரை டி.எஸ்.பி., கார்த்திக், தற்காப்புக்காக கால் மூட்டியில் சுட்டுப் பிடித்தார்.
திண்டுக்கல் சவேரியார்பாளையம் சி.கே.சி.எம்., நகரில் விக்னேஸ்வரன் இருப்பதை அறிந்து, டி.எஸ்.பி., கார்த்திக் தலைமையில், நகர தெற்கு எஸ்.ஐ., ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அவரை பிடிக்க சென்ற போது, விக்னேஷ்வரன் தப்பி ஓடினார். அவரை டி.எஸ்.பி., கார்த்திக் சுட்டு கைது செய்தார்.
