/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் நேர்முகத் தேர்வு
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் நேர்முகத் தேர்வு
ADDED : செப் 21, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரியில் கோவை கே.ஜி., இன்விக்டா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன் தலைமை வகித்தார். என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் லில்லியன் ,கே.ஜி., இன்விட்டா நிறுவனத்தின் சார்பாக மனித வள மேலாளர் ஹரி பிரசாத் பங்கேற்றனர்.
கலை அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.
நேர்முகத்தேர்வு,குழு விவாதம் என 2 சுற்றுகளாக நடந்தது. வேலை பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

