தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ என்.பி.ஆர்.,ல் 'பைன் ஸ்ட்ரா 2கே26'

 என்.பி.ஆர்.,ல் 'பைன் ஸ்ட்ரா 2கே26'

 என்.பி.ஆர்.,ல் 'பைன் ஸ்ட்ரா 2கே26'


ADDED : பிப் 15, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மைத் துறை முதுகலை கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக கல்லுாரிகள் இடையேயான 'பைன் ஸ்ட்ரா 2கே26' நிகழ்ச்சி. நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

மேலாண்மைத்துறை தலைவர் வேல்முருகன், முதுகலை கணினிபயன்பாட்டியல் துறைத்தலைவர் பானுசித்ரா வரவேற்றார். 22 கல்லுாரிகளைச் சார்ந்த 515 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜஸ்ட் எ மினிட்,புகைப்படம் எடுத்தல், வினாடி வினா, முக ஓவியம், கழிவுகளிலிருந்து கலை, இணைப்பு, நீங்கள் விரும்பியபடி, விளம்பரச் சட்டம்,

கார்ப்பரேட் வாக், குரூப் டான்ஸ் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று திண்டுக்கல் பான்செகோர்ஸ் மகளிர் கல்லூரி முதலிடம் பிடித்து ஓவர்ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது. மதுரை லேடி டோக் கல்லுாரி 2ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு , பாராட்டுச் சான்றிதழ்களை என்.பி.ஆர்., கல்விக்குழம இயக்குனர்கள் ஆனந்த் , அருணா செந்தில்குமார் , பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் வழங்கினர். மாணவன் முத்தரசு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us