ADDED : அக் 10, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தையம் அருகே பொருளூர் பகுதியில் களப்பணிக்கு சென்ற செவிலியர்கள் , டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்தும்,
கிராம சுகாதார செவிலியர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் , தாக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் இந்திரா தலைமை வகித்தார். அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், தலைவர் விசாலாட்சி, பொருளாளர் பார்த்திமா மேரி, பொதுச் செயலாளர் சத்யா, இணைச் செயலாளர் ஜெயசித்ரா, துணைத்தலைவர் சத்தியா கலந்து கொண்டனர்