UPDATED : மே 14, 2026 05:15 PM
ADDED : மே 14, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தமிழக நர்சுகள் பொதுநல சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் திண்டுக்கல யூனியன் கிளப் ஹாலில் (மே 14) நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கோபால் தேவி தலைமை வகித்தார். தென்மாநில பொதுச்செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். தமிழக நர்சுகள் சங்கம், ஒருங்கிணைந்த எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கம், தமிழக எம்.ஆர்.பி. செவலியர்கள் சங்கம், எம்.ஆர்.பி. கோவிட் நர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது, செவிலியர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வலியுறுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
