ADDED : ஆக 15, 2025 02:33 AM
திண்டுக்கல்:தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்க 31-வது மாநில மாநாடு திண்டுக்கல் ஜிடிஎன்.செவிலியர் கல்லுாரியில் நேற்று தொடங்கியது.
நாளை வரை நடக்கும் இதன் தொடக்க விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மாணவர்கள் 5500 நபர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு நடந்தது.சென்னை டி.எஸ்.பி., மணிமொழியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டது. செவிலியர் சங்க தமிழ் மாநில கிளை துணைத்தலைவர் உதயக்குமார் வரவேற்றார். செவிலியர் சங்கத்தலைவர் ஆனிகிரேஸ்கலைமதி தலைமை வகித்தார். ஆலோசகர் சுதா அறிக்கை வாசித்தார்.
ஜி.டி.என். கல்விக்குழும இயக்குநர் துரை பேசினார். சப் கலெக்டர் வினோதினி கலந்து கொண்டார். பொருளாளர் ஆனி ராஜா, பொருளாதார நலக்குழு தலைவர் ரீனா எவன்ஸி கலந்துகொண்டனர். சங்க செயலாளர் விஜயலெட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஜி.டி.என்.நர்சிங் கல்லூரி முதல்வர் வசந்தா மணி செய்திருந்தார்.
