சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
ADDED : பிப் 10, 2026 07:15 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அரசு அறிவித்த மே மாதம் முழுவதும் விடுமுறை என்ற கோரிக்களை தவிர பணப்பலன் வழங்கக்கூடிய 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என தொடர் போராட்டம் நேற்றும் நடந்தது.
கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பாமிதாபானு, செயலாளர் மகாலட்சுமி, நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கு பா.ஜ., சார்பில் ஆதரவு தெரிவித்து பா.ஜ., திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார், துணைத் தலைவர் சபாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
