ADDED : பிப் 11, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், ரூ.19 ஆயிரத்து 500 காலமுறை ஊதியம், உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700ம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட தலைவர் இந்திரா, தமிழ்செல்வி, நிர்வாகி மகாலட்சுமி உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
