sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' யில் இரவோடு இரவாக உருவான ஆக்கிரமிப்பு கடை

/

 'கொடை' யில் இரவோடு இரவாக உருவான ஆக்கிரமிப்பு கடை

 'கொடை' யில் இரவோடு இரவாக உருவான ஆக்கிரமிப்பு கடை

 'கொடை' யில் இரவோடு இரவாக உருவான ஆக்கிரமிப்பு கடை


ADDED : ஜன 07, 2026 06:20 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் குப்பை தொட்டியை அகற்றி இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு கடை அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அண்ணாசாலை முதலியார்புரம் 2 தெரு நுழைவுவாயிலில் நகராட்சி குப்பைத் தொட்டி அமைத்திருத்தது. குறுகிய வளைவான இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பை தொட்டியை அகற்றி மண் அள்ளும் இயந்திரம் மூலம் சமப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் கடை அமைத்துள்ளனர். நகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை இடங்களில் ஆளும் கட்சியினரின் துணையுடன் இத்தகைய செயல் நடந்தேறுகின்றன.

தொடரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசு நிலங்களும் கபளீகாமாவது கவலையளிப்பதாக உள்ளது. இது போன்று தெரசா நகரில் நகராட்சி குடிநீர் தொட்டியை அகற்றி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமான பணியை துவக்கி உள்ளனர்.

காலையில் குடிநீர் தொட்டி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டுமானம் ஏற்படுத்த கம்பி ஊன்றப்பட்ட நிலையில் இது குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் மாலையில் அகற்றப்பட்டது.

இந்நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், '' முதலியார்புரம் 2 தெருவில் குப்பை தொட்டியை அகற்றி அமைக்கப்பட்டுள்ள கடைக்கு நகராட்சி அனுமதியளிக்கவில்லை.

அதுபோல் தெரசா நகரில் உள்ள குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு கட்டுமானம் நடப்பதாக தெரியவந்துள்ளது, இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.






      Dinamalar
      Follow us