/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு இடத்தை ஆக்கிரமிப்பு; தர்ணா
/
அரசு இடத்தை ஆக்கிரமிப்பு; தர்ணா
ADDED : செப் 27, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: மல்லியம்பட்டியில் தனி நபர் ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி தாலுகா அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகையிட்டனர்.
இங்குள்ள முத்தாலம்மன் கோயில் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டு கோயில் பயன்பாட்டிற்காக ஊர் மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆக்கிரமித்தனர்.
நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மல்லியம்பட்டி பெண்கள் உட்பட ஏராளமானோர் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் விஜயலட்சுமி உறுதியளிக்க கலைந்து சென்றனர்.