/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதிப்பெண் சான்றிதழ் பெறாவிட்டால் அழிப்பு அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் எச்சரிக்கை

ADDED : அக் 07, 2025 04:27 AM
திண்டுக்கல்: மதிப்பெண் சான்றிதழ் பெறாத எஸ்.எஸ்.எல்.சி., எழுதிய தனித்தேர்வர்கள் 15 நாட்களுக்குள் பெறாவிட்டால் அழிக்கப்படும் என அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ் 2014 ல் தொடங்கி 2018 வரை மார்ச், ஜீன், அக்டோபர் ஆகிய 15 பருவங்களுக்குரிய சான்றிதழ்கள் இருப்பில் உள்ளன. தேர்வுத்துறை விதிபடி முடிவுகள் வெளியாகி இரு வருடங்கள் பின் தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்க உள்ளதால் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் செய்தி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 15 நாட்களுக்குள் நேரிலோ, ரூ.45 மதிப்பு அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம், தேர்வரின் ஹால்டிக்கட், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்து அனுப்பியோ சான்றிதழை பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.