தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெருமாள் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

பெருமாள் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

பெருமாள் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு


ADDED : அக் 31, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 03:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடி அகோபிலேஸ்வர பெருமாள் கோயில் முன் மண்டப சுவர் இடிந்தது குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பழைய ஆயக்குடியில் அகோபிலேஸ்வர பெருமாள் கோயில் முன்மண்டபத்தின் ஒருபகுதி சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இது குறித்த செய்தி அக். 29ல் தினமலர் நாளிதழில் வெளியானது. இதைதொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இடிந்த கோயில் முன்மண்டபத்தை ஆய்வு செய்தனர்.

கிராம திருப்பணி திட்டத்தின் கீழ் சேதம் அடைந்த பகுதிகளை அகற்றி நுழைவாயில் முன் மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

திண்டுக்கல் ஹிந்து அறநிலைத்துறை உதவி கமிஷனர் லட்சுமிமாலா, பழநி ஆய்வாளர் சாமிநாதன், கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெயந்தி ஸ்ரீதர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us