/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மது போதையில் தகராறு ஒருவர் கொலை
/
மது போதையில் தகராறு ஒருவர் கொலை
ADDED : அக் 22, 2025 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணைக்காடு: பண்ணைக்காட்டில் நண்பர்களுக்குள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்தி கொலை செய்யப் பட்டார்.
பண்ணைக்காட்டை சேர்ந்தவர்கள் வினோத்குமார் 22, சதீஷ்குமார் 21, முத்துக்குமார் 18. நண்பர்களான இவர்கள் தீபாவளியான நேற்று முன்தினம் மது குடித்துள்ளனர்.
இதில் சதீஷ்குமார், முத்துக்குமார் இருவரும் வினோத்குமார் குடும்பத்தினர் குறித்து போதையில் அவதூறாக பேசியதில் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வினோத்குமார் இருவரையும் தாக்கினார்.தகராறு முடிந்து வீடு திரும்பிய வினோத் குமாரை சதீஷ்குமார் ,முத்துக்குமார் தாக்கி கத்தியால் குத்தியதில் பலியானார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.