ADDED : ஜூலை 06, 2026 02:51 AM
பழநி: 'பழநி முருகன்கோயில் ரோப் கார் சேவை கட்டண டிக்கெட் இன்று முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் ' என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி முருகன் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டு வரும் வலைதளத்தில் பல்வேறு ஆன்லைன் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்டண தரிசனம், தங்க ரத புறப்பாடு டிக்கெட், தங்கத் தொட்டில், அர்ச்சனை டிக்கெட் உடன் சோதனை அடிப்படையில் கால பூஜை டிக்கெட் ஆறுகால பூஜைக்கு முறையே 5 நபர்களுக்கு சோதனை அடிப்படையில் ஆன்லைன் மூலம் வழங்க பக்தர்கள் பயன்படுத்தினர்.
இதனிடையே 'வின்ச்' சேவை ஆன்லைன் நேற்று தொடங்கிய நிலையில் ரோப் கார் சேவைக்கான ஆன்லைன் வசதி இன்று (ஜூலை 6) துவங்க உள்ளது. காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை 50 பக்தர்கள், மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை 50 பக்தர்கள் என 100 பக்தர்களுக்கு தினமும் ஆன்லைன் மூலம் தலா ரூ.100 வீதம் பழநி முருகன் கோயில் சென்று வர 'டிக்கெட்' வழங்கப்படுகிறது.
இதன்படி பக்தர்கள் எளிதில் ரோப் கார் மூலம் கோயில் சென்று வரலாம். விரைவில் விடுதிகளுக்கும் ஆன்லைன் மூலம் அறைகள் பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
