/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு
/
பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு
ADDED : ஜன 14, 2024 04:07 AM

பழநி, : பழநி பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணை தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
இந்த அணை ( 65 அடி) 64.50 அடியாக நேற்று காலையில் இருந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 71 கன அடி நீர்வரத்து இருந்தது. இதை தொடர்ந்து அணை நீர் நேற்று( ஜன.13) முதல் 100 நாட்களுக்கு இடது பிரதான கால்வாய் வழியாக திறந்துவிடப்பட்டது. வினாடிக்கு 70 கன அடி வீதம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். கலெக்டர் பூங்கொடி, செயற் பொறியாளர் பாலமுருகன், உதவி செயற் பொறியாளர் உதயகுமார் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.இதன்மூலம் பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், தாதநாயக்கன்பட்டி, நெய்க்காரப்பட்டி, சின்னகலையம்புத்தூர்,பெத்தநாயக்கன்பட்டி, சுக்கம நாயக்கன்பட்டி, மானுார், சித்திரைக் குளம், தாழையூத்து, கொழுமம் கொண்டான், கோரிக்கடவு, கோயில் அம்மாபட்டி, மேல்கரைபட்டி, அக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 9600 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது: 2023 ல் வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பழநி மாவட்டம் அமைப்பது குறித்து கொள்கை ரீதியான முடிவு என்பதால் முதல் அமைச்சர் ஸ்டாலின்தான் நடவடிக்கை எடுப்பார்.

