ADDED : மார் 16, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: வேடசந்துார் தொகுதி குளத்துார் ஊராட்சி எரமநாயக்கன்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து திறந்து வைத்தார். கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திகைசெல்வி, குளத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மகேஸ்வரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் பங்கேற்றனர்.
முன்னதாக இ.சித்துார் ஊராட்சி தண்ணீர்பந்தம்பட்டி, உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துபட்டி, கூவாக்காபட்டி ஊராட்சி கரட்டுப்பட்டி, ஆர்.கோம்பை ஊராட்சி இந்திரா நகரிலும் புதிய பகுதி நேர கடைகளை எம்.எல்.ஏ., திறந்தார்.
