ADDED : பிப் 14, 2026 07:14 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11ம் நாளாக நேற்று வேலை நிறுத்தம் செய்த ஊழியர்கள், முக்காடிட்டு ஒப்பாரி வைத்து அழுது நுாதன முறையில் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் (ஐ.சி.டி.எஸ்.,) மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் ,உதவியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் இந்திரா பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜகான் பேசினார்.
பழநி வட்டாரத் தலைவர் நந்தினிதேவி நன்றி கூறிார். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், பாலகிருஷ்ணன், பெரியசாமி, பெருமாள் பேசினர்.
