ADDED : ஆக 06, 2025 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் காக்கையன் குளத்துபட்டியில் 70 வயதான காளியம்மாள் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலை இறந்தார்.
இவரது முன்னோர், உறவினர்கள் புதைக்கப்பட்ட சொந்த நிலத்தில் புதைக்க ஏற்பாடு நடந்தது.
அந்த இடம் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி உறவினரான இருவர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுப்பட்டனர்.
வடமதுரை போலீசில் புகார் செய்ய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மூதாட்டியின் உடலை திட்டமிட்ட இடத்திலே புதைக்க செய்தனர்.

