ADDED : ஏப் 15, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:அய்யலுார் தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயிலில் தர்மகர்த்தா ரங்கநாதன் தீர்மானம் மூலம் வைரப்பெருமாள், சின்னு என இருவரை பூஜாரிகளாக நியமிக்க, இதற்கு பரம்பரை வழி பூஜாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஹிந்துசமய அறநிலைய துறை சார்பில் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பூஜாரி பணிக்கு பரம்பரை உரிமை கிடையாது என தீர்ப்பு வந்தது.
ஆனாலும் புதிய பூஜாரிகளால் கோயிலுக்குள் சென்று பணி செய்வதில் சுமூகமான சூழல் இல்லை. இதையடுத்து கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பூஜாரிகள் பணி செய்ய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தர்மகர்த்தா ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். புதிய பூஜாரிகள் பணிக்கு பாதுகாப்பு வழங்க திண்டுக்கல் எஸ்.பி., வடமதுரை இன்ஸ்பெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
