ADDED : ஜன 15, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை நான்கு நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
பழநி உட்கோட்ட எல்லையான ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை அருகில் உள்ள சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் விருப்பாச்சி அருகே பழநி உட்கோட்ட புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதை டி.ஐ.ஜி., சுவாமிநாதன், எஸ்.பி.,பிரதீப் திறந்து வைத்தனர். டி.எஸ்.பி., தனஜெயன் உடன் இருந்தார்.

