UPDATED : ஜூன் 20, 2026 04:45 PM
ADDED : ஜூன் 20, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:துாய்மை பாரத இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் ஒட்டுமொத்த துாய்மைப்பணிகள் நேற்று நடந்தது.
அதன்படி வேடசந்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளிலும் பொது இடங்கள், முக்கிய வீதிகள், திறந்தவெளியில் இருந்த குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு துாய்மைப்பணிகள் நடந்தது. காலை 7:00 மணி முதல் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள துாய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் முழுவீச்சில் இப்பணியில் ஈடுபட்டனர்.
