/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒத்தினிபட்டி கோயில் விழாவில் பால்குடம்
/
ஒத்தினிபட்டி கோயில் விழாவில் பால்குடம்
ADDED : ஜூன் 13, 2025 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: ஒத்தினிப்பட்டி கரையம்மன் கோயில் திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் இரவு கரையம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று மாலை அம்மன் பக்தர்கள் புடைசூழ பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.