UPDATED : நவ 17, 2026 08:04 PM
ADDED : நவ 17, 2026 08:04 PM

பழநி:
திண்டுக்கல் மாவட்டம் பழநி, பாலசமுத்திரம், அய்யம்புள்ளி, புதுஅச்சு பகுதிகளில் நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
பழநி சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஜோதி மட்டை, உமா மட்டை, சன்னரக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பழநி, பாலசமுத்திரம், அய்யம்புள்ளி, புதுஅச்சு பகுதிகளில் 500 ஏக்கர் நிலங்களில் நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
போதுமான மழை இல்லாத காரணத்தினால் பாசன நிலங்களில் உள்ள தண்ணீர் நிலவரத்தை கருத்தில் கொண்டு பழநி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் நடவுக்கான பணிகளை சிறிது தாமதமாக துவங்க திட்டமிட்டு உள்ளனர்.
தண்ணீர் தேவையை அனுசரித்து பெரும்பாலும் வரிசை நடவு முறையை விவசாயிகள் நாடுகின்றனர். வரிசை நடவு செய்ய இயந்திர தேவைக்கு அரசு மானியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
