/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை பழநி தி.மு.க., கவுன்சிலர் தர்ணா
/
ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை பழநி தி.மு.க., கவுன்சிலர் தர்ணா
ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை பழநி தி.மு.க., கவுன்சிலர் தர்ணா
ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை பழநி தி.மு.க., கவுன்சிலர் தர்ணா
ADDED : ஆக 01, 2025 02:05 AM

பழநி: பழநி நகராட்சி 22 வது வார்டில் ஒரு வாரமாக குடிநீர் வழங்கததை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் பஜ்லுார் ரகுமான் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
பழநி நகராட்சி 33 வார்டுகளுக்கும் பாலாறு பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் குறைந்து வருகிறது. இந்நிலையில் தாடாகுளம் பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழநி நகராட்சி 22 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பஜ்லுார் ரகுமான்ல வார்டுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பழநி நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றார். அவர் கூறுகையில், ஒரு வாரமாக 22 வார்டு பகுதியில் குடிநீர் வழங்க வில்லை. இதனால் வார்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் '' என்றார்.