/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா துவங்கியது
/
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா துவங்கியது
ADDED : பிப் 07, 2026 06:04 AM
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மாசி திருவிழா நேற்று (பிப். 6 ) இரவு 8:42 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. பிப். 10 ல் திருக்கம்பம் சாட்டுதல்,இரவு 11:00 மணிக்கு குமாரசமுத்திரம், அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம், அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல்,பிப். 17ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நடைபெறுகிறது. பிப்.24 ல் திருக்கல்யாணம், பிப்.25ல் தேரோட்டம் நடைபெற உள்ளது.
21 நாட்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் ரதவீதி உலா நடைபெறுகிறது.

