/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜன.26ல் பழநி தைப்பூச விழா துவக்கம்
/
ஜன.26ல் பழநி தைப்பூச விழா துவக்கம்
ADDED : ஜன 21, 2026 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் கொடி மண்டபத்தில் ஜன.26ல் வள்ளி, தேவசேனா, முத்துக்குமாரசுவாமி எழுந்தருள காலை 9:50 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு ஜன.,31ல் திருக்கல்யாணம், மாலை தேரோட்டம் நடக்கிறது. தைப்பூச நாளான பிப். 1 அதிகாலை 5:00 மணிக்கு தோளுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருள தீர்த்தம் கொடுத்தலும் மாலை 4:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. பிப். 4 மாலை தெப்பத் தேர் திருவிழா, இரவு கொடி இறக்குதல் நடக்கிறது.

