ADDED : செப் 27, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
நத்தம்: -நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., திட்டம், நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் 195, 196 சார்பில், பனை விதைகளை நடும் நெடும் பணி நிகழ்ச்சி நடந்தது.
நத்தம் புன்னப்பட்டி ஊராட்சிச் செயலர் செந்தில்குமரன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்து, ‘பனை மரங்களின் சுற்றுச்சூழல், நீர்வளப் பாதுகாப்பில் உள்ள முக்கியத்துவம் குறித்து பேசினார். கல்லுாரி என்.எஸ்.எஸ்.,திட்ட அலுவலர் சிவக்குமார், திட்ட மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர். பின் குளக்கரையை சுற்றியப் பகுதிகளில் 2000 பனை விதைகளை நடவு செய்தனர். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
