ADDED : மார் 29, 2026 11:12 PM

திண்டுக்கல்:இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அவரது சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துவர்கள் 40 நாள் தவக்காலத்தை கடைபிடித்து ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிப்பர்.
அதன்படி திண்டுக்கல் சி.எஸ்.ஐ.தூய பவுல் சர்ச்சில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது. மறைமாவட்ட பாதிரியார் தாமஸ் பால்சாமி திருப்பலி நிறைவேற்றினார்.தொடர்ந்து நடந்த குருத்தோலை ஊர்வலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக 'ஓசன்னா' பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர்.
கன்னிவாடி:
குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் பங்குத்தந்தை சவுந்தர் தலைமையில் சிறப்பு திருப்பலி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. பின்னர் ஓசானா பாடியபடி ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலம் சென்றனர். கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் பங்குத்தந்தை நெப்போலியன் சிறப்பு திருப்பலி நடத்தினார்.
